பரங்கிப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும் அங்கு என்.எல்.சி. சார்பில் கட்டப்பட்ட கழிவறை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது. தற்போது அந்த கழிவறை கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ரெயில் நிலையத்தில் உள்ள விளக்குகள் எரியாததை பயன்படுத்தி தினசரி இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை நடைபாதையில் உடைத்து செல்கின்றனர். இதை தடுக்க ரெயில்வே நிர்வாகம் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, அந்த கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.