கோவை திருச்சி சாலை ஒண்டிபுதூர் அருகே காமாட்சிபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.