சூலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளை சார்பில் காந்திபுரத்தில் இருந்து குமாரபாளையம் வரை இயக்கப்படும் 41 டி மற்றும் காந்திபுரத்தில் இருந்து கோம்பக்காட்டு புதூர் வரை இயக்கப்படும் 19 ஜே ஆகிய பஸ்களை சோமனூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இது அந்த பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது அந்த வழியாக 2 பஸ்கள் மட்டுமே சோமனூர் வரை செல்கிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.