கோவை தடாகம் சாலையில் அரசு தொழில்நுட்ப கல்லூரி அருகே குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. மேலும் அங்கு குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால் சேறும், சகதியுமாக சாலை மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்வதோடு பணியை முடித்து, குழியை மூடி, சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.