டிக்கெட் கட்டணம் உயர்வு

Update: 2023-09-20 09:19 GMT

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பஸ்கள் மணியகாரம்பாளையம் வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும் பயண தூரம் அதிகரித்ததால், தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. தற்போது மேம்பால பணிகள் முடிவடைந்துவிட்டது. மேலும் அனைத்து பஸ்களும் வழக்கமான வழியில் சென்று வருகின்றன. ஆனால் தனியார் பஸ்களில் உயர்த்திய கட்டணம் குறைக்கப்படவில்ைல. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்