போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-23 12:47 GMT

பொள்ளாச்சி கடை வீதி, கிழக்கு போலீஸ் நிலையம் சாலை ஆகிய இடங்களில் வணிக நிறுவனங்கள், கடைகள் அதிகளவில் உள்ளன. இங்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்களுடைய இருசக்கர வாகனங்களை கடைகள் முன்பு தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்