அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்-திருச்சி வழித்தடத்தில் சென்று வந்த பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதால் இப்பகுதி மக்கள் குறித்த நேரத்திற்கு வெளியூர் சென்றுவர பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.