காத்திருக்கும் பயணிகள்

Update: 2023-02-05 09:30 GMT

உக்கடத்தில் இருந்து பீடம்பள்ளிக்கு 69ஏ என்ற எண் கொண்ட அரசு பஸ் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படுகிறது. ஆனால் மதிய நேரத்தில் இயக்கப்படுவது இல்லை. அந்த நேரத்தில் வேறு பஸ்களும் இல்லை. இதனால் பட்டணம் பகுதியில் இருந்து நடுப்பாளையம் வரை செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மதிய நேரத்திலும் அந்த அரசு பஸ்சை முறையாக இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்