மதுரை மாவட்டம் செல்லூர் அருகே வார்டு எண் : 37 -ல் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி மார்கெட்டில் காய், பழங்கள் விற்க மாநகராட்சி நிர்வாகத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கடைகள் கட்டப்பட்டு வியாபாரிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த மார்க்கெட் வெளியே சிலர் சாலையோரங்களை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து உள்ளனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.