கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-12-28 09:43 GMT

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்புதூர் பகுதிக்கு போதிய அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. ஒருசில அரசு பஸ்களே இயக்கப்படுகிறது. அந்த பஸ்களும் குறித்த நேரத்தில் இயக்கப்படுவது கிடையாது. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே புதுப்புதூர் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி