சூலூர் சார் பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையம், வங்கி உள்ளிட்ட கட்டிடங்களுக்கு முன்பு தாறுமாறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இது தவிர வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.