கோவை பொம்மனம்பாளையம் அருகே சின்னமலை அடிவாரத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கிறது. ஆனால் பொம்மனம்பாளையத்தில் இருந்து சின்னமலை அடிவாரத்துக்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் நடந்து செல்லும் நிலை உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், பக்தர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அவர்களது பாதுகாப்பு கருதி பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.