புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், மாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த பயணிகள் நிழற்குடையில் பயணிகள் அமர்ந்து பஸ் ஏறி வெளியூர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் மழை பெய்யும் போது கட்டிடத்தின் மேல் கூரை இடிந்து விழ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.