மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள விளாங்குடி நான்கு முனை சந்திப்பில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைத்து விபத்து நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.