சூலூர் தாலுகா காடம்பாடி அருகே குமாரபாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு செல்லும் வழிகாட்டி பலகை நெடுஞ்சாலைத்துறை மூலம் மாவட்ட எல்லையில் வைக்கப்பட்டு இருக்கிறது. கிராமத்தின் கடைக்கோடி பகுதியில் வைக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் குழம்பி தவிக்கின்றனர். இதனால் தவறுதலாக திருப்பூரை நோக்கி செல்லும் நிலை உள்ளது. மேலும் அந்த வழிகாட்டி பலகையில் குமாரபாளையத்துக்கு செல்ல வேண்டிய தூரம் தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே அதை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.