அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோரைக்குழி கிராமத்திற்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து கோரைக்குழி வழியாக விக்கிரகலத்திற்கு தினமும் காலை, மதியம், இரவு என 3 வேலையும் ஒரு நகரப் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் காலை 6 மணிக்கு விக்கிரமங்கலம் வந்து மீண்டும் ஜெயங்கொண்டம் திரும்பிச் செல்லும் பஸ் ஒரு சில நாட்களில் விக்கிரமங்கலம் வராமலே கோரைக்குழி வரை வந்துவிட்டு அப்படியே ஜெயங்கொண்டம் திரும்பி சென்று விடுகிறது. இதனால் காலை வேளைகளில் விக்கிரமங்கலம் வழியாக அரியலூருக்கு செல்லும் பொதுமக்கள் செல்லமுடியாமல், மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.