ஆபத்தான பள்ளம்

Update: 2022-10-12 12:37 GMT

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் இருந்து நுகர்பொருள் வாணிபகழக குடோன் அருகில் இருந்து பொய்யேரிக்கரை சாலைக்கு இணைப்பு உள்ளது. இந்த சாலையும், திருச்செங்கோடு சாலையும் சந்திக்கும் இடத்தில் சாலையோரமாக ஆபத்தான பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிக்கும் அபாயம் இருப்பதால், இந்த பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்