சிதம்பரம் நகரில் உள்ள முக்கிய சாலைகள், மும்முனை மற்றும் நான்குமுனை சந்திப்புகளில் போக்குவரத்தை சீரமைக்க சிக்னல்கள் அமைக்கப்பட்டது. இதனை சரியாக பராமரிக்காத காரணத்தால், சிக்னல்கள் தற்போது பழுதாகி பயனின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலைகளில் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க பழுதடைந்த அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.