சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக காட்டுமன்னார்கோவிலுக்கு பள்ளி, கல்லூரி நேரங்களில் போதுமான அளவுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் அரசு பஸ்சில் படி கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தாண முறையில் பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.