நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் பஸ்நிலையத்தில் இருந்து நேரு பூங்கா வரை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை மற்றும் போலீஸ் நிலையம் அருகில் என 3 இடங்களில் நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலங்களில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை போடப்பட்ட மேம்பாலம் மட்டும் அப்பள்ளியின் மாணவிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மீதமுள்ள 2 நடைபாதை மேம்பாலங்களும் பயன்பாட்டில் இல்லை. எனவே இந்த நடைபாதை மேம்பாலங்களை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.