பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2022-09-25 14:37 GMT

கோவை கவுண்டம்பாளையம் மேட்டுப்பாளையம் சாலையில் ஹவுசிங் யூனிட் பஸ் நிறுத்த பகுதி, கவுண்டம்பாளையம் பிரிவு ஆகிய இடங்களில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் காரணமாக அங்கு பஸ் ஏறி இறங்க வரும் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் மழை, வெயிலில் திறந்த வெளியில் காத்து கிடக்கும் அவல நிலை உள்ளது. எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி