மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்கலம், கண்ணுடையாள்புரம், அய்யப்பநாயக்கன்பட்டி, குருவித்துறை வழியாக நிலக்கோட்டை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை இயக்கப்படும் அரசு பஸ் காலை மற்றும் மாலையில் சரியான நேரங்களில் இயக்கப்படுவது இல்லை. இதனால் மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.