முட்புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2022-07-11 08:23 GMT

பந்தலூர் அருகே உள்ள அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளிக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் மூலைக்கடை வரை முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் கொளப்பள்ளி வரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்கவும், முட்புதர்களை அகற்றவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்