ரெயில்கள் நின்று செல்லுமா?

Update: 2022-08-29 09:37 GMT
தென்மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல் வழியாக சிதம்பரம், கடலூர் பகுதிகளுக்கு இரவு நேரத்தில் மட்டும் சில ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் கடலூர் துறைமுகம் சந்திப்பு, பரங்கிப்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் ஒரு ரெயில் கூட நிற்பதில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே பயணிகள் நலன்கருதி, அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் கடலூர் துறைமுகம் சந்திப்பு, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் ரெயில்கள் நின்று செல்ல, சம்பந்தப்பட்ட ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்