போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை

Update: 2022-08-27 14:38 GMT

 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி, இடையாத்தூரில் குருந்துடைய அய்யனார் கோவில் உள்ளது. இங்கிருந்து அம்புராணி, மொட்டையாண்டி, வீரண்டான், இடையார் வழியாக அறந்தாங்கி செல்லும் சாலை சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் அதிகளவில் சென்று வருகின்றனர். ஆகையால் இந்த சாலையை சீர்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்