மதுரை திருமங்கலத்தில் உள்ள உசிலம்பட்டி ரோட்டில் ஏராளமான கடைகள் உள்ளன. ஆனால் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி மற்றும் திருமண மண்டபங்களும் அதே ரோட்டில் உள்ளன. உரிய வாகன நிறுத்தும் இடம் இல்லாததால் கடைகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு வந்து செல்பவர்கள் தங்களது வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அந்த ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்