அரியலூர் மார்க்கெட் தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுவிட்டு நீண்ட நேரம் ஆகி வந்து தங்களின் வாகனங்களை எடுத்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.