சிக்னலில் நிற்காத வாகனங்கள்

Update: 2022-08-23 11:01 GMT

நாமக்கல்-திருச்சி சாலை போலீஸ் நிலையம் எதிரில் 3 சாலைகள் சந்திக்கும் இடம் உள்ளது. இதில் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நடந்து வந்தது. இதை தடுக்க போலீசார் சமீபத்தில் அங்கு சிக்னல் விளக்கை அமைத்தனர். இது விபத்தை தடுக்க பயன் உள்ளதாக இருந்தாலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் சிக்னல் விளக்கை கண்டுகொள்ளாமல் அத்துமீறி வாகனங்களை ஓட்டி செல்வதை பார்க்க முடிகிறது. எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் சிக்னலில் நின்று செல்ல போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்