வேலூர் அருகே சத்துவாச்சாரி மந்தைவெளியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் சாலையின் ஓரத்தில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் முழுவதும் அவ்வப்போது தெருவில் ஓடுகிறது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சதீஷ்குமார், வேலூர்.