வாலாஜா பஸ் நிலையம் முன்பு பஜார் பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் முழுவதும் மூடப்பட்டு, அதன் மீது ஆக்கிரமிப்புக் கடைகள் உள்ளன. இதனால் கால்வாய்களில் ஓடும் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. போலீஸ் பாதுகாப்போடு நகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வருவார்களா?
-ராமச்சந்திரன், வாலாஜா.