செங்கம் பகுதியில் தளவாநாயக்கன்பேட்டை, செந்தமிழ் நகர், துக்காப்பேட்டை, புதிய பஸ் நிலையம், நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள தெருவான ராஜவீதி மற்றும் அதன் இணைப்பு தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், தளவாநாயக்கன்பேட்டை பகுதியில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் குளம்போல் சாலையில் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-காமராஜ், செங்கம்.