கால்வாய்க்கு மூடி போடுவார்களா?

Update: 2024-10-20 20:02 GMT

காட்பாடி காந்திநகர் 11-வது கிழக்கு மெயின் சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. தற்போது அவற்றில் மூடி இல்லாததால் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இரவில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் மேலே 2 மூடிகளை போட வேண்டும்.

-அகோரமூர்த்தி, காட்பாடி.

மேலும் செய்திகள்