வாலாஜா ஒன்றியம் வி.சி.மோட்டூர் ஊராட்சி 4-வது வார்டு எம்.ஜி.ஆர்.சிலை அருகில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.3½ லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் பணி ஆணை வழங்கி ஒரு ஆண்டாக கால்வாய் கட்டும் பணியை தொடங்காமல் காலம் கடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் கட்டும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும்.
-எம்.செல்வி, வி.சி.மோட்டூர்.