வேலூர் மாநகராட்சி விருப்பாட்சிபுரம் காந்திநகர் 1-வது தெருவில் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து ஆய்வு செய்து கால்வாய் கட்டித்தருவார்களா?
-வேலாயுதம், விருப்பாட்சிபுரம்.