அரக்கோணம் கணேஷ்நகர், ஹவுசிங்போர்டு, நேருஜி நகர் ஆகிய பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலர் நேருஜி நகர் 4-வது தெரு பிரதான ரோட்டின் வழியாக சென்று வருகின்றனர். இந்த ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' சாலை மட்டத்தில் இருந்து பள்ளமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் செல்வோரும், பள்ளி மாணவர்களும் தினமும் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜான் தாமஸ் அரக்கோணம்.