கழிவுநீர் கால்வாய் சீர்படுத்தப்படுமா?

Update: 2023-05-10 17:30 GMT

வாலாஜா பஸ் நிலையம் எதிரில் பழைய வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஆதிதிராவிட நல வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார் கருவூல அலுவலகம் உள்ளன. வட்டாட்சியர் அலுவலகம் வெளிப்புற சுற்றுச்சுவரை ஒட்டினால் போல் உள்ள சாக்கடை கால்வாய் பிளாட்பாரத்ைத ஆக்கிரமிப்பு செய்பவர்கள் சாக்கடை கால்வாயை சேதப்படுத்தி உள்ளனர். இதனால், சாக்கடை கால்வாய் கழிவுநீர் வட்டாட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் பரவலாக ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் கால்வாயை சீர்படுத்துவார்களா?

-புகழேந்தி, வாலாஜா. 

மேலும் செய்திகள்