கழிவுநீர் கால்வாய் சரியான முறையில் அமைக்கப்படுமா?

Update: 2025-01-26 12:43 GMT

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராகவேந்திரா நகரில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் சரியான முறையில் அமைக்கப்படாததால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கொசு தொல்லை அதிகமாக உள்ளது. கழிவுநீர் கால்வாயை சரியான முறையில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேசன், ஒடுகத்தூர். 

மேலும் செய்திகள்