பேரணாம்பட்டு டவுன் தரைக்காடு மலைப் பகுதியையொட்டி தொடங்கும் குப்பைமேடு பகுதியில் இருந்து வீ.கோட்டாரோடு ஈத்கா வரை கால்வாயில் 6 அடி ஆழத்துக்கு 700 மீட்டர் தூரத்துக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்வாய் பழுதடைந்து தூர்ந்துபோய் உள்ளது. சாலையோரத்தில் கால்வாய் உள்ளதால் மழைக காலங்களில் கால்வாய் இருப்பது தெரியாமல் சிறுவர், சிறுமிகள், முதியோர் தவறி விழுந்து காயமடைகிறார்கள். உடனடியாக கால்வாயை தூர்வாரி சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
அமானுல்லா, தரைக்காடு பேரணாம்பட்டு.