கால்வாயில் சிமெண்டு சிலாப் அமைக்கப்படுமா?

Update: 2023-11-05 17:01 GMT

வேலூர் மாநகராட்சி கழிஞ்சூர் 13-வது வார்டு காந்தி தெரு பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பில் மழைப் பெய்யும்போது அங்கு தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதன் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. கால்வாய்க்கு சிமெண்டு சிலாப் அமைக்க வேண்டும். மேலும் சாலையோரம் குடிநீர் திருப்பும் வால்வு உள்ளது. அந்த வால்வு தொட்டி மூடப்படாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜி.பெருமாள். கழிஞ்சூர்.

மேலும் செய்திகள்