வேலூர்-ஆற்காடு சாலையில் இருந்து சி.எம்.சி. அருகில் தோட்டப் பாளையம் செல்லும் வழியில எடத்தெரு உள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்தத் தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், தெரு முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக கழிவுநீர் ஓடுகிறது. கழிவுநீர் கால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-லோகேஷ், தோட்டப்பாளையம் வேலூர்.