திருப்பத்தூர்-புதுக்கோட்டை சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சாலையோரம் செல்லும் கழிவுநீர் கால்வாய் சரியான முறையில் தூர்வாரப்படுவதில்லை. இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கஜேந்திரன், புதுக்கோட்டை.