போளூர் தாலுகா பால்வார்த்து வென்றான் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத குடிநீர் கிணறு உள்ளது. அதில் கழிவறை நீர், துணிகளை துவைக்கும் சோப்பு நீர், பாத்திரங்கள் கழுவும் நீர் விடப்படுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. தெரு சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. கிணற்றைச் சுற்றி மரம், செடி, கொடிகள் வளர்ந்து விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.வேலு, பால்வார்த்துவென்றான், போளூர்.