கால்வாய்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும்

Update: 2024-09-08 20:27 GMT

திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட சஞ்சீவிராயன்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரிலும், அங்கன்வாடி மையம் எதிரிலும் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்தக் கால்வாய் முழுமை பெறாமல் பகுதி அளவே கட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறி வருகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் கால்வாயை சீர் செய்து கொசுப் புழுக்கள் உருவாவதை தடுக்க கொசு மருந்து அடிக்க வேண்டும்.

-முருகன், திமிரி.

மேலும் செய்திகள்