வேலூர் சத்துவாச்சாரி வேளாளர் தெருவில் உள்ள வரசக்தி விநாயகர் கோவில் பின்பக்கம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் சிமெண்டு சிலாப்புகள் உடைந்துள்ளது. அதுபோக கால்வாயின் மேல்பகுதியில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இரவில் வாகனங்களில் செல்வோர் அங்குள்ள பள்ளத்தில் விழும் அவலம் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரிமுத்து, வேலூர்.