வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் பழைய வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இங்கு சாலையோர கால்வாய்கள் பழுதடைந்துள்ளதால் கழிவுநீர் அதிகமாக வரும்போது பக்கவாட்டில் வழிந்து வட்டாட்சியர் அலுவலகம் உள்ளே வழிந்தோடுகிறது. இதனால் அலுவலக வளாகப் பகுதி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பழைய வட்டாட்சியர் அலுவலக முன் பகுதியில் உள்ள கால்வாய் பகுதி முழுவதும் அடைப்புகள் நீக்கி தூர்வார வேண்டும்.
-நரசிம்மன், வாலாஜா.