திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி 8-வது வார்டில் புதிதாக கட்டப்பட்ட கால்வாயில் கழிவுநீர், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் ஓடவில்லை. கால்வாயை தூர்வார வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் வார்டு கவுன்சிலரோ, ஊராட்சி நிர்வாகமோ நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
-எஸ்.அப்துல்லாபாஷா, சமூக ஆர்வலர், கடம்பூர்.