திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி 8-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாராமல் உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார வேண்டும்.
-எஸ்.அப்துல்பாஷா, சமூக ஆர்வலர், மாதனூர்.