கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-05-03 17:31 GMT

பேரணாம்பட்டு பகுதியில் பழைய ஆம்பூர் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை கிடக்கின்றன. இதனால் கால்வாய் தூர்ந்துபோய் கழிவுநீர் ஓடாமல் உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. கால்வாயை தூர்வாரக் கோரி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது கழிவுநீர் கால்வாயை தூர்வாருவார்களா?

-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்