திருப்பத்தூர் நகர பகுதியையொட்டி உள்ள ஆசிரியர் நகர் பகுதியில் சுடுகாட்டை யொட்டி உள்ள கால்வாயில் நீண்ட நாட்களாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் ஓடாமல் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும்.
-த.விமல்மோகன்கணேஷ், திருப்பத்தூர்.