வேலூர் சாய்நாதபுரம் வள்ளலார் நகர் மெயின்ரோடு பகுதியில் மழை நீரை வடிய வைக்க கால்வாய் மேல் மூடியை சேதப்படுத்தி, மழை நீர் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கால்வாய் மேல் மூடியை இன்னும் சீரமைக்கவில்லை. அந்தக் கால்வாயை கடக்க மக்கள் சிரமப்படுகிறார்கள். கால்வாயால் விபத்துகள் நடக்கின்றன. எனவே கால்வாய்க்கு மூடி போட்டு, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வி.என்.தனசேகரன், வேலூர்.